போதைப்பொருள் அழிப்பிற்கு நடவடிக்கை

நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 16.7 பில்லியன் ரூபாய் பெறுமதியான 928 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், இந்த மாதம் பொது இடமொன்றில் வைத்து அழிக்கப்படவுள்ளதாக திட்டமிட்டக் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் 1,595 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதில் எந்த வழக்குகளுடனும் தொடர்புபடாத அல்லது உரிமையாளர் யாரும் இல்லாத 928 கிலோ கொக்கெய்ன் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு