லாஸ் வெகஸில் துப்பாக்கிச் சூடு; 20 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் வெகஸில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

மேண்டலே பே ஹோட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது பெருமளவான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களை இலக்கு வைத்து, அருகில் இருந்த உயரமான கட்டிடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதில் இருவர் உயிரிழந்ததாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு