எரிபொருள் விலையை குறைக்கத் தயார்: லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, செப். 25: எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா கூறுகையில் 'சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் உள்ளூர் சந்தையில் அதனை நேரடியாக பிரதிபலிக்க முடியாது. தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் கடந்த காலங்களில் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டன. இதையும் கருத்தில் எடுக்க வேண்டும். ஆனால், எரிபொருள் விலையைக் குறைக்கும் தீர்மானத்தை வலுசக்தி அமைச்சே எடுக்க முடியும். வலுசக்தி அமைச்சு தீர்மானித்தால் எரிபொருள் விலையை குறைக்கத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.74 அமெரிக்க டொலராக உள்ளது. பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.15 அமெரிக்க டொலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.