யாழில் சொலிடாரிடி சென்றர் அங்குரார்ப்பணம் (Photos)

சொலிடாரிடி சென்றர் சட்ட உதவி அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இந்தியன் இல்லத்திற்கு அருகாமையில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்து வைத்தனர்.

இந்த சொலிடாரிடி சென்ரர் சட்ட உதவி அலுவலகத்தின் ஊடாக தொழிலாளர் உரிமை தொடர்பான, ஆரோக்கியமான வேலைச்சூழலில் பால்நிலை சமத்துவம் பேணுதல் தொடர்பான சட்டஉதவிகள் வழங்கப்படும். இந்த நிலையத்தின் சட்ட உதவிகள் தேவையானவர்கள், 021 2214444 இந்த தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலையம் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் திறந்துவைக்கப்படவுள்ளன.

நேற்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் உட்பட சட்டத்தரணிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு