பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்குத் தமிழ் பெண்கள் முன்வர வேண்டும் (Photos)

வடபகுதிக்கு 1,000 தமிழ் பொலிஸார் உடனடியாக தேவையாகவுள்ள நிலையில், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாகவும், விஷேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே நடைபெறவுள்ளதாகவும், அவர்கள் பயிற்சிக்கு வடகிழக்கு வெளியில் போக தேவையில்லைஎன்பதால், மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் எதிர்வரும் ஜனவரி மாதம் 1,000 தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளதாகவும், அதில் பொண்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன், மாதாந்த ஊதியமாக 55,000 ரூபா பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு