அமெரிக்க வர்த்தக செயலாளர் உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

வாஷிங்டன், செப்.27

ஐ.நா. சபையின் 77-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வர்த்தகச் செயலாளருடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடைபெற்றது.

நெகிழ்வான விநியோக சங்கிலிகள், இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு, உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வணிக ஊக்குவிப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.