மீண்டும் செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப்.27

கோளாறு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழந்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரமே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, மின்வெட்டு காலத்தை நீடிப்பது தொடர்பான அறிவிப்பு எதிர்காலத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேலும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.