பௌத்த மக்களே பிக்குகளின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதி

பௌத்த பிக்குகளின் கௌரவத்தினை பாதுகாப்பது, பௌத்த மக்களின் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக சிலர் கூறி வருகின்ற போதிலும், அது தவறான கருத்து எனவும், புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் சிறிதளவேனும் குறைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளின் கௌரவத்தை பாதுகாப்பது, ஒவ்வொரு பௌத்தர்களது கடமையென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு