இரு உள்ளூராட்சி நிறுவனத் தேர்தல்களில் பெரமுன வெற்றி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, செப்.28

கொழும்பு, செப். 28:

கம்பளை மற்றும் பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தலில், சபையின் மொத்தமுள்ள 87 ஆசனங்களில் 53 இடங்களில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் 34 ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, கம்பளை கூட்டுறவு சபை தேர்தலில் பொதுஜன பெரமுன 06 ஆசனங்களை வென்றுள்ளது. எதிர்க்கட்சி தலைமையிலான குழு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில் " எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எப்படி இருந்தபோதிலும், மக்களின் ஆதரவு எமக்கு இருப்பதை இந்த வெற்றி காட்டி நிற்கிறது' என்று தெரிவித்துள்ளது.