யாழில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம்,செப் 29

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று (29) மதியம் 12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக சுண்டுக்குளிச் சந்தியை அடைந்து பழைய பூங்கா வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடைந்தது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனுக்கு யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.