பொன்னியின் செல்வன்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்தியா,செப் 29

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இப்படம் சுமார் 2,045-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.