தேசிய விளையாட்டுப் போட்டி ரோயல் கல்லூரியில் ஆரம்பம்

அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய கொடியை ஏற்றியும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் விளையாட்டு கொடியை ஏற்றியும் விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவிதாதனகே உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு