மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

மியன்மார், செப்.30

மியான்மரின் வடமேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மியன்மாரின் மொனிவாவில் இருந்து வடமேற்கே சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.