இலங்கையில் 1,333 வெளிநாட்டு அகதிகள்

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பொறுப்பில் அகதிகளாகவும், அரசியல் தஞ்சம் கோருவோராகவும் 1,333 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களே அதிகமென (1037 பேர்) நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளதுடன், அந்த 1,333 பேரில் 728 பேர் அகதிகளாக தங்கியிருப்பதாகவும் ஏனைய 605 பேரும் அரசியல் புகலிடம் கோரி தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் விசாரணைகளை நடத்திவரும் நிலையில், அரசியல் தஞ்சம் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் வேறொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இல்லையேல் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்களென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிற நாடுகளிலிருந்து வந்தோர், ஆப்கானிஸ்தான் – 190, மியன்மார் – 36, ஈராக் – 18, சோமாலியா – 14, ஏமன் – 13, மாலைதீவு – 11, பாலஸ்தீனம் – 10, நைஜீரியா – 02, சிரியா மற்றும் நியுனேசியா நாடுகளிலிருந்து தலா ஒருவர் என்ற எண்ணிக்கையில் ஏனைய நாட்டவர்கள் இலங்கையில் ஐ.நா அகதிகளுக்கான ஆணையத்தின் பொறுப்பில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு