ஆசிரியர் தினத்தன்று ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று, பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்கப்படாமை, 2016-2017 சுற்றுநிரூபத்திற்கமைய, அதிபர்களுக்கான கொடுப்பனவை வழங்காமை, ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்காமை போன்ற பல காரணங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு, கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்குமாறும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு