வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் பௌத்தத்திற்கு விஷேட இடமில்லை

சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுக்களின் இடைக்கால அறிக்கையில், பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளதென சில தரப்புகள் கூறிவந்தாலும், தற்போது காணப்படும் அரசமைப்பிலும், பௌத்தத்துக்கு விஷேட இடம் வழங்கப்படவில்லையென அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துடன், தற்போதைய அரசமைப்பில் பௌத்த மதம் தொடர்பாகக் காணப்படும் உறுப்புரை 9, சரியான முறையில் விளக்கப்படவில்லை எனவும், அந்த உறுப்புரை, பௌத்த மதத்துக்கு விஷேட சிறப்புரிமைகளையோ அல்லது விஷேட இடமோ வழங்கப்படவில்லை. அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, வெறுமனே சோடனை தான். ஆனால், அந்தச் சோதனை நிலையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் தாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தாலும், பௌத்தம் என்பது எங்களது பாரம்பரியத்தின் அங்கம். பௌத்தத்தின் அமைதியான தன்மை காரணமாக, ஏனைய மதங்களுக்கு, எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த உறுப்புரை, மாற்றப்படாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு