த.தே.கூவிற்கு வடக்கில் எதிர்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணத்துக்கான அங்கத்தவர்களை இணைப்பதற்கான நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மாகாணத்தில் தற்போதைய சூழலில் எதிர்ப்புக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திப் பணிகள், வடக்கில் முழுமூச்சாக இடம்பெறுவதில்லை எனவும், அதுபற்றி, மக்கள் கரிசனை கொண்டுள்ளதுடன், தனது விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்கட்சி மோதல் காணப்படுவதை உணர்ந்ததாகவும் பஷில் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு