கிரிக்கெட் அணியை முன்னேற்ற முன்னாள் வீரர்கள் குழு விருப்பம் தெரிவிப்பு

விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக இலங்கை கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளடங்கிய குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அரவிந்த டி சில்வா, மஹேல ஜெயவர்த்தன, குமார சங்கக்கார உள்ளிட்டவர்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் உள்ளடங்கும் நிலையில், அவர்கள் இலவசமாகவே தங்களின் சேவையை வழங்க முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், ஏற்கனவே தாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், இந்த குழு எதிர்வரும் 04 மாதங்களுக்குள் இலங்கையின் கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான வழிவகைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கான திட்டங்கள், இலங்கை கிரிக்கெட் ஊடாக அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனாலும் அவர்கள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தொடர்புபட விருப்பம் காட்டவில்லை என்றும் அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு