போதைப்பொருள் ஒழிப்பு செயலமர்வில் ஜனாதிபதி

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செயலமர்வில் உங்களைச் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியும் பொலன்னறுவை ரோயல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் மாணவி வித்தியா கொலையாளிகளுக்கு நீதி மன்றம் தண்டனை வழங்கியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த கொலை நடைபெற்ற தினத்தில் கொலையாளிகள் அனைவரும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர்.

கடந்த வருடம் குருநாகலை மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து அச்சிறுமியை கொலை செய்திருந்த நிகழ்வுடன் தொடர்புடைய நபரும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு