ஜேர்மனி செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும், ஜேர்மனி விஜயத்தை நிறைவு செய்துவிட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி பிரதமர் உத்தியோகபூர்வ விஜயமாக பின்லாந்துக்கு செல்லவுள்ளதாகவும், பின்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தல், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் குறித்த விஜயத்தின் போது, அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட குழுவினரும் பின்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு