சந்தைகளிலுள்ள எண்ணெய்களில் 90 வீதமானவை தரமற்றவை

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் 90 வீதமான எண்ணெய் வகைகள் தரமற்றவையென நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதுமுள்ள பல பகுதிகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் வகைகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த எண்ணெய் வகைளில் பிறிதொரு இரசாயனம் கலக்கப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு