இலங்கை அகதி தொடர்பில் சாதகமான பதிலில்லை – உறவினர்கள் கவலை

அவுஸ்திரேலியாவின், பபுவா நியூகினியாவிலுள்ள மனூஸ் தீவில் உயிரிழந்த, இலங்கை அகதியை, தாய்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

மனூஸ் தீவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 32 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை (02) உயிரிழந்த போதிலும், அவரது சடலத்தினை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சியிலுள்ள அவரது உறவினர்களுடன் தாம் தொடர்பினை ஏற்படுத்திய போது, உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு 7,500 அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு உறவினர்களிடத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், உயிரிழந்தவரின் சடலம் மனூஸ் தீவில், பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, தமக்கு சாதகமான பதில் கிடைக்குமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு