இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதிகள் விடுவிப்பு அவசியம்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயத்தில் தாங்கள் அதிக கவனம் எடுத்து நிலைமையை சீராக்குமாறு வேண்டுவதாகவும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் காணப்படும் சில விடயங்கள் இங்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் திரும்பச்செய்ய 29.07.1987ம் திகதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 2.1.1. சரத்தில் “பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் வேறு அவசரகால சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் போராளிகளுக்கும், குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும், வழக்கு தொடரப்பட்டவர்களுக்கும் அல்லது இச்சட்டங்களின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவார். இலங்கை அரசு இளம் போராளிகளுக்கு தேசிய வாழ்விற்கு திரும்பக் கூடிய வகையில் புனர் வாழ்வு அளிக்க விசேட கவனம் செலுத்தும். இதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும்”. எனக் குறிப்பிட்டதற்கமைவாக தாங்கள் உடன் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பொது மன்னிப்போ அல்லது நிபந்தனையுடன் கூடிய விடுதலையையோ அளித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

இல்லாவிடில் விரும்பத்தகாத ஒரு சில சம்பவங்களை நாடு சந்திக்க வேண்டி நேரிடுமென தான் அச்சமடைகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு