நாமலுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 06 பேரும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதைத் தொடர்ந்தே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி சானக, பிரசன்ன ரணவீர மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, அஜித் பிரசன்ன ஆகியோரை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்றிரவு 7.30 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு