இலங்கை – பின்லாந்து பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்தின் பிரதமர் ஜுஹா சிபிலாவை சந்தித்துள்ளார்.

பின்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹெல்சின்கியில் அந்த நாட்டின் பிரதமரது இல்லத்தில் வைத்து அவரை சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலோங்கச் செய்வதற்கான பொதுவான விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதுடன், சக்திவளப் பகிர்வு, வர்த்தக நோக்கிலான அணுகல்கள் தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பின்லாந்தில் பேணப்படும் குப்பைகூள முகாமைத்துவக் கொள்கை மற்றும் குப்பைக்கூளங்களை சக்திவளங்களாக மாற்றும் செய்கைகளையும் பிரதமர் கண்காணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு