வான்வழி அம்பியூலன்ஸ் சேவை

இலங்கையில் வான்வழி அம்பியூலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உயிராபத்துகளைக் குறைத்து கொள்ளும் நோக்கில், இந்தச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில், உரிய பாதுகாப்பு முறை ஒன்று இல்லாமையினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நோயாளர்கள் முச்சக்கர வண்டியிலேயே அழைத்து செல்லப்படும் நிலை காரணமாகவே, அம்பியூலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போது கொழும்பு மற்றும் தென் பகுதியில் 88 சேவைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மாவட்டங்களுக்கும் அவசர விபத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில், நல்ல முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுத்து செல்லப்படுவதாகவும், அடுத்த வருடம் முதல் இந்த இந்திய அம்பியூலன்ஸ் சேவையை, மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 250 அம்பியூலன்ஸ் வண்டிகளை இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திடீர் அனர்த்தங்களின் போது, தரை மற்றும் வான் வழிச் சேவைகளை முன்னெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காக 24 ஹெலிகொப்டர்கள், 1,025 அம்பியூலன்ஸ், விபத்துகளுக்கான 24 வாகனங்கள் பெற்றுக்கொடுக்க ஜேர்மன் அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும், முதலில் விபத்து வாகனங்கள், ஹெலிகொப்டர்களையே பெற்றுக்கொண்டதாகவும், இலங்கையில் தற்போது காணப்படும் வாகன நெரிசல் காரணமாக, அத்தருணத்தில் அம்பியூலன்ஸ் வண்டிகள் அவ்வழியே செல்ல முடியாது என்பதனால், அவசர அனர்த்த சந்தர்ப்பத்தில் வான்வழி சேவையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு