சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு செப்டெம்பர் வரையில் இலங்கைக்கு 02 லட்சம் சீன சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் 18 ஆயிரம் சீனர்கள் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இலங்கைக்கு இந்த ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருட இறுதிக்குள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட இலக்கான 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை அடைய முடியும் என்றும் அமைச்சு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த ஆண்டில் மாத்திரம் சுற்றுலாப் பயணிகள் மூலம் 02 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு