நாவற்குழி பாலம் புனரமைப்பு – ரயில் சேவைகளில் மாற்றம்

யாழ்ப்பாணத்திற்கும் – நாவற்குழிக்கும் இடையிலான புகையிரத பாதையிலுள்ள நாவற்குழி பாலம் புனரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு என்பது பெருமளவு உள்ளதுடன், 178 மில்லியன் ரூபா செலவில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த பாலத்தில் நிலைய ஆழப்பகுதியானது தேசமடைந்துள்ள நிலையில், அதனை புதிய உத்தேச முறையிலான ஆழமாக்கும் முறையினை பயன்படுத்தி குறித்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக பாலத்தினை புனரமைக்கும் திட்ட பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திருத்த வேலையில் காரணமாக நாவற்குழியில் புகையிரத நிலையம் வரை சேவைகள் இடம்பெறவுள்ளதால், பயணிகள் தமது ஆசனப் பதிவுகளை புங்கன்குளம், யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த புகையிரத நிலையங்களில் மேற்கொள்ள முடியாதென புகையிரத கட்டுப்பாட்டு உயரதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் தமது பயணங்களை நாவற்குழி புகையிரத நிலையத்திலிருந்து மேற்கொள்ள முடியும் என்றும், இதற்கான நேரமாற்றங்கள் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு