பின்லாந்து சபநாயகரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கை – பின்லாந்து பாராளுமன்றத்திற்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தி, இருதரப்பு பரிமாற்ற வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பின்லாந்தின் சபாநாயகர் மரியா லோஹோலா தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மரியா லோஹோலா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பின்லாந்தின் பாராளுமன்ற முறை மற்றும் பாரம்பரியம் குறித்து ஆராய வாய்ப்பளிக்கவும், பிற நாடுகளின் பாராளுமன்ற முறை மற்றும் பாரம்பரியங்களில் ஊக்கங்களை பெற்றுக்கொள்ளவும் தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த சுமார் இரண்டு வருடகாலப் பகுதிகளில் இலங்கை பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்ட நியாயமான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது, பின்லாந்து சபாநாயகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க இதன்போது நீண்ட விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு