அரசியல் கைதிகளின் உறவுகள் நல்லூரில் வழிபாடு

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களது உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர்.

தமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக உரிய முறையில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லையென இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்த போதிலும், அதனை நிறைவேற்றாமையை கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வடக்கில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஹர்த்தால் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு