தமிழ் அரசியல் கைதிகளில் விரைவான விடுதலை அவசியம்

சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடென சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளில் நிலவும் தாமதம் காரணமாகவே தமிழ் கைதிகளின் விடுதலையிலும் தாமதம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதன்போது, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு