இரண்டு வருடங்களில் காணிகள் விடுக்கப்படும்

வடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை இன்னும் இரண்டு வருடங்களில் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், பாதுகாப்பு காரணங்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை பொது மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்கும் பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், காணிகளை இழந்துள்ளவர்களுக்கு நஷ்டஈடு அல்லது மாற்று காணிகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை, வீடுகளை இழந்த பெருமளவானோருக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு