புகையிரத சாரதிகளுக்கு காலக்கெடு

இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் சங்கத்திற்கு தீர்மானம் எடுப்பதற்கு இன்னும் ஒரு மணிநேர கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத காப்பாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், வழங்கப்பட்டுள்ள ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் சிறந்த தீர்மாம் ஒன்றை எடுக்க தவறினால் புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு