இ.போ.ச சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் பணிப் புறக்கணிப்பினால், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முனனெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைக் கொண்டு விஷேட சேவைகளை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு