வடக்கின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் (Photos)

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ள நிலையில், வடக்கில் மருந்தகங்கள் தவிர்ந்த பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளமையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், பேருந்து சேவைகள் இல்லாமையினால் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அலுவலர்கள் குறைவாகவே சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசு அரசியல் தீர்மானமெடுத்து நிபந்தனையின்றி அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோரிக்கைக் கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து உரிய பதிலெதுவும் வழங்கப்படாத நிலையில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு