வர்த்தமானி வெளியிட்ட பின் வேட்புமனுத் தாக்கலுக்கான திகதி தீர்மானிக்கப்படும்

மாநகர, நகர, பிரதேச சபை திருத்தச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் குறித்து தீர்மானிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழு கூட்டத்தின் போதே இது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தச் சட்டம், அமைச்சர் பைசர் முஸ்தபாவினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்ட போது, மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் குறித்த சட்டத்தை வர்த்தமானியில் அறிவிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு