தொடர்கிறது சீரற்ற காலநிலை

நிலவும் சீரற்ற காலநிலை தொடருமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரை அடை மழை பெய்யக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச்சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மேல், மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு