அணு ஆயுத ஒப்பந்தத்தை மீளப்பெறுகிறது அமெரிக்கா?

அணு ஆயுதம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மீளப்பெறுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடையினைக் கொண்டு வருவது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பொருளாதார தடையினை மீள அமுல்ப்படுத்துவதா என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் எதிர்வரும் 60 நாட்களில் தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து ஐரோப்பிய மற்றும் சீன நாடுகளுடன் ஆலோசனையினை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் மேற்கொள்ளவுள்ளார். ஈரானுடனான உறவினை துண்டிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலுமிருந்து அழுத்தங்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்த ஈரான் சம்மதத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு