3ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான மூன்றாம்சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளினதும் அமைச்சர்கள் மட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை சார்பில் கடற்தொழில் மற்றும் நீரியல்வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொள்ளவுள்ளதுடன், இந்தியா சார்பில் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோஹன் சிங் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது, முக்கிய பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இலங்கையின் தடுப்பிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு