மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வைப் பெறுவது அவசியம் (Photos)

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானதாக இருந்தாலும், ஆணைக்குழுக்களை நியமித்து குழுவாக இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஐ.நா சபையின் விஷேட பிரதிநிதி றப்பட்ட பப்லோ டிகிறிப் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்துரையாடல் செயலணி, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நிலைமாறு கால நீதி தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஒன்றினைந்து செயல் விளைவினை அதிகரித்து சில பாகங்களில் நடந்த அனுபவங்களை வைத்து கொள்கைமூலம் நீதி மற்றும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

அத்துடன், நிலைமாறு கால நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

அதன்பின்னர், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திறந்த கலந்துரையாடலிலும் ஈடுபட்ட நிலையில், அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பகத் தன்மையினை ஏற்படுத்துதல் அவசியமானது எனவும், அனைத்துச் சமூகத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ள நிலையில், இரு சாரார்களின் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதன் ஊடாக நம்பகத்தன்மையினை ஏற்படுத்த முடியும் எனவும், 04 விடயங்களின் மூலம் நிலைமாறு கால நீதியினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதனையும் நிர்ப்பந்திக்க முடியாது. புரிந்துரைகள் மட்டுமே செய்ய முடியும் எனவும், காணாமல் போனோர்கள் தொடர்பில் நீண்டகாலம் தனது சேவையினை செய்து வருவதாகவும், அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் அரசியல் கைதிகள் இல்லையெனத் தெரிவிக்கும் அதேவேளை, ஒரு சாரார் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களெனத் தெரிவிப்பதனால், இரு வகையான முரண்பாடுகள் உள்ளதாகவும், மக்களின் கருத்துக்களை பரிந்துரை செய்ய முடியுமே தவிர, வேறு எவற்றினையும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு