ஐ.நா பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விஷேட பிரதிநிதி பப்லோ டி கிறீவ் நேற்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழு கேட்போர்கூடத்தில் காணாமற் போனோரின் உறவினர்களுக்கான அமைப்பினரை அவர் சந்தித்துள்ளதுடன், காணாமற் போனோர் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் மன்னார் மாந்தை புதைகுழி வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளையும் ஐ.நா விஷேட பிரதிநிதி சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விஷேட பிரதிநிதி, மன்னார் மாவட்டத்தின் மகளிர் அமைப்புகள் ஒன்றிய அலுவலகத்திற்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன், மன்னார் மாந்தை பகுதியில் மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கும் ஐ.நா விஷேட பிரதிநிதி சென்றிருந்த போதிலும், அவர் வாகனத்திலிருந்து இறங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விஷேட பிரதிநிதி பப்லோ டி கிறீவ், வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு