காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி

இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, எதிர்காலத்தில் அதன் தலைவராக நியமிக்கப்படுவாரென கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் பலர் நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வருவதாகவும், அது தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியானது சோனியா காந்தியிடமிருந்து அவரது மகனான ராகுல் காந்திக்கு வழங்கப்படலாமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு