உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விஷேட அமைச்சரவைப் பத்திரம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான விஷேட அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அது பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும் எனவும், தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுமென அதன்பின்னர் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.