எதிர்வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் கடும் மழை நிலைமை, பெரும்பாலும் குறைவடையக் கூடுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேகத்துடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நீடிக்குமெனவும், கடுமையான காற்றும் எதிர்பார்க்கப்பட முடியுமெனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளதுடன், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும், வடமேற்கு, வடமத்திய, வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வு கூறியுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் இரத்தினபுரி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு