அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

அரசியல் கைதிகளின் நியாயம் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் அரசியல் கைதிகளுக்கு தீர்வு இல்லையா? என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியவாறு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு