தனுஷ்கவின் தண்டனையில் திருத்தம்

கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு மற்றும் போட்டி ஒப்பந்தங்களை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திருத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க சார்பில் எஸ்.எஸ்.சி கிரிக்கெட் குழுவினரால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை கருத்தில் கொண்டே, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு மற்றும் போட்டி ஒப்பந்தங்களை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, 06 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதுடன், வருடாந்த ஒப்பந்தத்தினால் கிடைக்கும் பணத்தில் நூற்றுக்கு 20 வீதம் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டது.

இருந்த போதிலும், 06 போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடைய 03 போட்டிகளாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஒரு வருட காலப்பகுதிக்குள் தனுஷ்க மீண்டும் ஒப்பந்தத்தை மீறினால், மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான தடையும் அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு