இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கக் கூட்டத்தில் இலங்கை பங்கேற்கும்

தென்னாபிரிக்கா, டேபனில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் கூட்டத்தில் இலங்கை கலந்துகொள்ளவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா, ஓஸினியா பிரதேசங்களிலுள்ள 32 நாடுகளுடன் இலங்கை சர்வதேச வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும், இந்து சமுத்திர நாடுகளின் உறுப்பு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் உண்மையான நன்மைகளை இலங்கை கவனிக்காது விட்ட போதிலும், தற்போது இலங்கைக்கு வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர கரையோர நாடுகளின் பிரதான கூட்டம், இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், 17ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் நாளை (18) நடைபெறவுள்ளது. 32 அங்கத்துவ நாடுகளின் அமைச்சர்கள் இந்து சமுத்திர கரையோர நாடுகளின் பிரதான பிரச்சினையான கடல் பாதுகாப்புப் பற்றிப் பேசப்படவுள்ளன. ஏனைய பாதுகாப்பான இந்து சமுத்திர பொருட்கள், மக்களின் அசைவுருக்கு ஊக்கியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கரையோர நாடுகள் இந்தப் பிராந்தியத்தின் மீன் வளங்களை பாதுகாப்பதிலும் மிகுந்த அக்கறையாக உள்ளதாகவும், கடல் பொருளாதாரத்தின் அபிவிருத்தி இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கக்கூடியதாக உள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவமும் இந்த நாடுகளின் அக்கறைக்கு உரியதாகின்றது என்றும் அமைச்சர் திலக் மாரப்பன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு