திருமலையில் விமானப்படை உத்தியோகத்தர் உயிரிழப்பு

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு நீராடச்சென்ற விமானப்படை உத்தியோகத்தரொருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கிபிஸ்ஸ – நாகல்வெவ பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து மொறவெவ விமானப்படை தளத்திற்கு கட்டிட நிர்மாணப் பணிக்காக வந்த 15 பேர் நேற்று விடுமுறை காரணமாக குளத்திற்கு நீராடச் சென்றிருந்த போதே நீரில் மூழ்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு