07 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

05 ஆட்டங்களை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையிலுள்ளது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பாக உப்புல் தரங்க 61 ஓட்டங்களையும், திஸ்ஸர பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஹசன் அலி 34 ஓட்டங்களை கொடுத்து 05 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது. இமாம் 100 ஓட்டங்களையும், ஹவீஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு