கடன் நெருக்கடியைத் தீர்க்க தெளிவான திட்டமுண்டு

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டம், இலங்கையிடம் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

துணை நிறுவனங்களின் விற்பனை மூலமாகவும், அதேபோல் தனியார் மயமாக்கல் மூலமாகவும் கிடைக்கும் பணம், கடன்களை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் எனவும், இதை ஓர் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை என்றும், இதுவரை நாங்கள், கடன் மீளச்செலுத்தலுக்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை. அதைச் செய்யும் நோக்கம் எங்களுக்கில்லை. இந்நிலைமையைச் சமாளிக்கும் தெளிவான திட்டம் மத்திய வங்கியிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன், 2016ஆம் ஆண்டின் முடிவில், 47 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 57 சதவீதமாக உள்ளதாகவும், அக்கடன்களில் 68 சதவீதமானவை, அரசதுறையின் கடன்களாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கம் பெற்ற கடன்களே, இலங்கையின் இவ்வாறான நிலைமைக்குக் காரணமாக உள்ளது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எனினும், அடுத்தாண்டில், கடன் எதனையும் திருப்பியளிக்க வேண்டிய தேவையில்லாமை, இலங்கைக்கு அனுகூலமானதென ஆளுநர் தெரிவித்துள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக, சர்வதேச இறையாண்மைப் பிணைமுறி எவையும், அடுத்தாண்டில் முதிர்ச்சியடையவில்லை என்ற போதிலும், 2019ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு, பிணைமுறிகளின் முதிர்ச்சியடைதல் காணப்படுவதாகவும், அடுத்தாண்டை, நிதிச் சேகரித்தலுக்காக அரசாங்கம் பயன்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு